About My Duty...
I learnt IT in 1995. I am interesting in systems analysis & designs, web designs, and software developing. I was Lecturing IT from 1996 to 2009. Later I am working management level job. But, I am doing individually IT Jobs. I want to share my IT skills through the web that I design the Yarlsoft Solutions. What I know that I can share to you. I believe you will collaborate with me. Free solutions for you: I want to give free consulting and free guidance for webs or blogs or forums creation and maintenance that the following conditions are satisfied. Who introduce mental health care duty. Who introduce pure Tamil care duty. Who care online Tamil E-Books library. Who trained writers and E-Publishers. Who published Tamil software and Tamil web solutions. Like world wide Who care Tamil language and Tamil nation. Would you mind loving above solutions, you can contact me. |
எனது பணி பற்றி...
நான் 1995 இல் தான் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவைப் படித்தேன். எனக்கு அமைப்புப் பகுப்பாய்வும் வடிவமைப்பும், இணையத்தள வடிவமைப்பு, மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றில் நாட்டம் அதிகம். நான் 1996 தொடக்கம் 2009 வரை கணினித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். பின்னர், நான் முகாமைத்துவத்துறையில் பணியாற்றி வந்தாலும் கூட என் விருப்புக்குரிய கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பப் பணிகளைத் தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றேன். எனது கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவே யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) தளத்தை மேம்படுத்திப் பேணுகின்றேன். நான் கற்றறிந்த, பட்டறிந்த கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். எனது முயற்சிகளுக்குத் தங்களது ஒத்துழைப்புக் கிட்டுமென நம்புகின்றேன். உளநலப் பேணுகைப் பணி, தூய தமிழ் பேணும் பணி, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணும் பணி, மின்வெளியீட்டை ஊக்குவிப்பதோடு எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணி, தமிழ் மென்பொருள்கள், தமிழ் வலைத்தளத் தீர்வுகள் வெளியிடும் பணி ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு; அதாவது உலகெங்கும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவோருக்கு என்னாலான இலவசப் பணிகளை மேற்கொள்ள எண்ணியுள்ளேன். அதாவது வலைத்தளங்கள், வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் போன்றன உருவாக்கவும் பேணவும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்க விரும்புகின்றேன். மேற்காணும் என் தீர்வுகளை நீங்கள் விரும்பினால் என்னுடன் தொடர்புகொள்ளலாம். |
Copyright © 2019 Kasi.Jeevalingam | Thanks, Visit Again! | Web Design By Yarlsoft Solutions |